மரணத்தை நான்
நேசிக்கிறேன்...!
அது இயல்பாக வருமென்றால்...
ஒரு மலரில் தெரியும் பூந்துகளாய் ...
வானுரசி வீசும்
மெலிந்த மேகமாய்...
சொட்டென்று விழும்
முதலாவது மழைத்துளி
மணலோடு கரைவுறுதலாய்...
இயல்பாய் வரும் மரணமெனில்
அதை நான் நேசிக்கிறேன்!
மரணத்தை நான் வெறுக்கிறேன்...!
சம்மதமில்லாமலே
புணரப் பார்க்கிற காமுகனாய்...
வெடிமருந்தின் கரிய நெடியாய்...
சூடான குருதித்துளியில்
தன் தாகம் தீர்க்கும்
நரவேட்டைக்காரனாய்...
வரும் குரூரமான மரணத்தை
நான் வெறுக்கிறேன்!
-தாட்சாயணி-
சகோதரி
ReplyDeleteஆம் தங்கள் வரிகள் நியம்
ஆனால்
மரணத்தை நாம் நேசிக்கும் போதும்
மரணத்தை நாம் வெறுக்கும் போதும்
மரணம் எங்களை நேசத்துடன் ஏற்று கொள்கின்றது
மரணம் எவரையும் விருப்போடு ஏற்கின்றது
யாரையும் வெறுப்புடன் அது ஏற்கவில்லை
ஓவியா
தங்கள் கருத்துக்கு நன்றி
ReplyDelete