Friday, April 13, 2012

கரையில் தேடும் சிறுமி


                                  
நுரை சுழித்த
கடலின் கரையில்,
நீண்ட நாட்களாக
ஒரு சிறுமி வந்து போகிறாள்...!

அவள் எதைத் தேடுகிறாள்...?
சிப்பிகளும்,சோகிகளும்...
தேடும் வயதுதான்...

என்றாலும்,
அது குறித்த ஆர்வம்
அவளுக்கிருப்பதாய்
இன்னும் அறியப்படவில்லை!

அவள்
அலைகளுக்கிடையில்
நுரை பிடிக்க
முயற்சித்தாளுமில்லை!

நெடுந்துயர் விரவிக்கிடக்கிறது
அவள் விழிகளில்...

அவளறியாத எதையோ...
அவளிடமிருந்து யாரோ...
பறித்துவிட்டார்கள்...

அவளறிய...
அது என்னவென்று
தெரியவில்லை அவளுக்கு...

உலகில்
சிப்பிகளுக்கும்,சோகிகளுக்கும்
மேலாக...
எதுவோ இருக்கிறதுதான்...!

அவளறிய...
அது என்னவென்று
தெரியவில்லை அவளுக்கு...

நுரை சுழித்த
கடலின் கரையில்
அவள் எதையோ...
தேடிக்கொண்டிருக்கிறாள் !

                                -2012 சித்திரை, ஞானம்

9 comments:

  1. நெடுந்துயர் விரவிக் கிடக்கும்
    சிறு விழிகளின்
    முடியாத தேடல்
    கடலில் கண்ணீரைக் கரைக்கிறது.

    ReplyDelete
  2. Why not remove word Verification. But keep moderation. So that you can control comments.
    just a suggestion so that we can comment easily.

    ReplyDelete
  3. நன்றி Doctor,இப்போது சில மாற்றங்களைச் செய்தேன் அது உங்கள் ஆலோசனைப்படி அமைந்ததா எனத் தெரியவில்லை.நான் Blogs இல் புதிது என்பதால் இவ்வாறான சில திருத்தங்களை உங்களைப் போன்றவர்களின் ஆலோசனைகளின் பின்னரே இனம் காண முடிகின்றது.சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி
    இந்த கவிதையை வாசித்து இக் கவிதைக்குள்
    எனது தேடல் ஒன்று கேள்வியை எழுந்து நிட்கின்றேது
    உங்கள் கவிதை நுரை சுளித்த கடலின் கரையில் // என்ற கவிதையில் சிறுமியின் தேடல் இதுதான் என ஏன் உங்களால் சுட்டி நிற்க முடியவில்லை ??
    ஓவியா

    ReplyDelete
  5. நன்றி சகோதரி
    தேடல்களை இனம்காணுவது ஒவ்வொருவரின் மனதிற்கேற்ப வேறுபடும்.
    வாசகர்களின் சிந்தனைக்கும் சற்று இடமளிக்க வேண்டும் தானே.

    ReplyDelete
  6. அருமையான கவிதை ..கவிதைகளியிடையே உள்ள ஏதோ ஒன்று எனக்குள்ளும் ஊடுருகிறது

    வாழ்த்துகளுடன்
    எஸ்.மதி

    ReplyDelete
  7. அவளறியாத எதையோ..அவளிடமிருந்து பறித்த மிருகங்கள் பற்றி அவள் கடலிடம் முறையிட வருகிறாளா? சிறுமியின் வலி சொல்லும் வார்த்தைகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

    ReplyDelete
  8. தங்கள் கருத்திற்கு நன்றி தீபிகா.

    ReplyDelete