Tuesday, January 10, 2012

பிரயத்தனம்

         

மூச்சள்ளிப் போயிற்று
காற்று ஒரு நொடிக்குள்….
காற்றின் அணைப்பில்
பறந்துகொண்டிருந்தேன்
இலேசாய்…..மிக இலேசாய்….!
உலகம் நினைப்பிலில்லை!
பயணம் மட்டுமே
பிரதானமாயிற்று!
‘பொத்’தென்று காற்று
எனைத்தள்ளிப் போயிற்று!
விழுந்தேன் வெறுநிலத்தில்….
பட்ட காயங்கள்
ஆறிக்கொண்டிருக்கையில்
காத்திருக்கிறேன்…..
இனியொரு தடவை காற்று
என் மூச்சள்ளிப் போகும்
என்று….
அப்போது காற்றை மட்டுமே
இறுகப் பற்றும்
பிரயத்தனங்களோடு…..

                                              -தாட்சாயணி   

No comments:

Post a Comment