மனதின் அழுக்கு
வெளியே திரளும்
சிரிப்பை நம்பி
ஏமாந்து விடக்கூடாதென்றுதான்
எப்போதும்
நினைக்கிறேன்…
எனினும்
சிரிப்புகள் வழியும்
உதடுகளுக்குள்
கருநஞ்சு
வளர்வதென்றால்
எங்ஙனம்
அதை நம்ப…?
சயனத்திலிருக்கும்
அவர்களின் விழியிடுக்குகளில்
பூளையென
வழிந்து ஒழுகுகிறது
மனதின் அழுக்கு!
- தாட்சாயணி
மல்லிகை 2011சித்திரை
No comments:
Post a Comment