எனது தெருக்களில்
இப்போது
முகமூடிகளின் விற்பனை
அமோகமாய் நடக்கிறது!
விதவிதமாய் முகமூடிகள்!
கோர முகம்…
சிரித்த முகம்…
அழுகை முகம்…
அனைத்துக்கும் பிரதிநிதிகள்
அமோகமாய் இருக்கிறார்கள்!
ஒருவன்
எல்லா முகங்களிலும்
கணக்கெடுத்து வாங்குகிறான்
நிறங்களிலும் பேதம்…
அத்தனையும் வேண்டுமென்றான்!
கடைசியிலே
இத்தனை முகம் அணிந்தாய்!
உந்தன் சொந்த முகம்
எதுவென்றேன்!
சொந்தமுகம் என்றால்
என்னவென்று கேட்டான்!
நீ அவனா…?
நீ இவனா…?
இல்லையென்றால்
நீ எவன்தான் என்றேன்…!
நான் மனிதன் இல்லையென்றான்!
உண்மையது!
இதைவிடவும்
வேறெதைத்தான்
நான் சொல்வேன்!
-தாட்சாயணி
மல்லிகை 2011 சித்திரை
No comments:
Post a Comment